Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக நாடுகளை அச்சுறுத்தும் சைபர் தாக்குதல்: சர்வதேச அளவில் முடங்கும் சர்வர்கள்!

சில நாள்களாகவே, உலக நாடுகள் அத்தனையும் புதிதாகப் படையெடுத்துள்ள சைபர் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றன. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையையே ஆட்டம்காணச்செய்துள்ள இந்த ‘ரான்சம்வேர்’ (Ransomeware) சைபர் தாக்குதலை எதிர்த்து, ட்ரம்ப்பின் புதிய படை விரைந்து களமிறங்க உள்ளது.

சைபர் தாக்குதல்


ஒரே நாளில், இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் உள்ள சுமார் 2 லட்சம் சர்வர்களை இந்த ரான்சம்வேர் முடக்கியுள்ளது. தற்போது, குறைந்த வேகத்திலேயே செயல்பட்டுவரும் ‘ரான்சம்வேர்’ தாக்குதல், விரைவில் புதிய அச்சுறுத்துல்களுடன் விரைந்து தாக்கும் என சைபர் க்ரைம் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸியால் தயாரிக்கப்பட்ட சில திருட்டு மென்பொருள்கள் களவாடப்பட்டதே, இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் என அமெரிக்காவின் மீது அத்தனை குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படுகின்றன. முதலில் இதை அமெரிக்க அரசு மறுத்தபோதும், தற்போதைய வைரஸ் தாக்குதல்கள் சந்தேகங்களை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன. 

முதலில் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளைத் தாக்கிய ‘ரான்சம்வேர்’, கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 150 நாடுகளில் உள்ள 2 லட்சம் சர்வர்களை முடக்கியுள்ளது. இ-மெயில் மூலமாகப் பரவிவருவதாகக் கூறப்படும் இந்த ரான்சாம்வேர் வைரஸ் தாக்குதலை உடனடியாகக் கட்டுப்படுத்த, அமெரிக்க அரசு தீவிரமாக முயன்றுவருகிறது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close