Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ட்ரம்ப் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்வார்!' - இந்திய வம்சாவளி பெண்ணின் சர்ச்சை பேச்சு!

Nikki haley

'அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப்தான் நாட்டின் சி.இ.ஓ. அவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் வேலையை விட்டுத் தூக்குவார்' என்று சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்துள்ளார் ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி. இவர் இந்திய வம்சாவளி பெண். 

கடந்த மே 10-ம் தேதி, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-யின் இயக்குநர் ஜேம்ஸ் கோமியை அதிரடியாக பணியிலிருந்து தூக்கினார் ட்ரம்ப். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்ற வழக்கை கோமி விசாரித்து வந்த நிலையில், அவரை பணியிலிருந்து நீக்கினார் ட்ரம்ப். அமெரிக்காவில் இந்த நடவடிக்கை பலத்த கண்டனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.

இதையொட்டி நிக்கி ஹேலியிடம் கேள்வி கேட்ட போதுதான், 'ட்ரம்ப்தான் நாட்டின் சி.இ.ஓ. அவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் பணியிலிருந்து நீக்கலாம். பலர் அவர் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு காரணம், மற்றவர்களைப் போல் அல்லாமல் அவர் செயல்படுகிறார்' என்று சர்ச்சைக் கருத்தைக் கூறியுள்ளார். 

மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை வட கொரியா நடத்திய 'தொலை தூரம் சென்று தாக்கும் திறனுடைய ஏவுகணை' சோதனை குறித்து ஹேலி, 'வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துவருகிறார். இந்நிலையில், ஏவுகணை சோதனையால் இந்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல முடியாது. வட கொரியா சில நிபந்தனைகளுக்கு உட்பட்டால்தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும்' என்று தெரிவித்துள்ளார்.  
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close