Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்பாவி பொதுமக்களைக் கொன்று எரித்துவருகிறது சிரியா..! - அமெரிக்கா குற்றச்சாட்டு

சிரியாவில், கடந்த ஆறு ஆண்டுகளாக சிரியா ராணுவத்துக்கும்  கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுச் சண்டைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சண்டையில், அப்பாவி பொதுமக்களே இரு தரப்பின் தாக்குதல்களிலும் இறந்துவருகின்றனர். இந்த நிலையில், 'சிரியா ராணுவம் அப்பாவிப் பொதுமக்களைப் பிடித்துக் கொன்று, ராணுவ வளாகத்திலேயே எரித்துவருகிறது' என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

syria civil war

சிரியாவின் அதிபராக பஷர் அல் ஆசாத் இருந்துவருகிறார். இவரின் ஆட்சிக்கு எதிராகத்தான் கிளர்ச்சியாளர்கள் யுத்தம் புரிந்து வருகின்றனர். தற்போது, ஆசாத் தலைமையிலான அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பயங்கர ஆயுதங்களைக்கொண்டு சண்டைகள் நடைபெற்றுவருகின்றன. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள சைத்னயா என்ற இடத்தில், சிரியாவின் ராணுவ முகாம் உள்ளது. இந்த ராணுவ முகாமில்தான் கிளர்ச்சியாளர்களைப் பிடித்து அடைத்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள். அவர்கள் மீது ராணுவம் பொய்க் குற்றம் சுமத்தி மரண தண்டனை விதித்து வருவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் உடல்கள் கிடைக்காதவாறு சிறைக்குள்ளேயே எரித்துவிடுகிறார்கள் என்று ஆசாத் தலைமையிலான ராணுவத்தை அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 13 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க தூதர் ஸ்டூவர்டு ஜான்ஸ் கூறியுள்ளார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close