Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப்புக்கு எதிராக புதிய அரசியல் இயக்கம்! - ஹிலரி அதிரடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிரான புதிய அரசியல் இயக்கத்தை, முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளின்டன் துவங்க உள்ளார்.

ஹிலரி க்ளின்டன்

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராக ஹிலரி கிளின்டன் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் அவர், குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் தோல்வியுற்றார்.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக ஹிலரி கிளின்டன் புதிய அரசியல் நடவடிக்கைக் குழுவை 'ஒன்றிணைவோம் ' என்ற கோஷத்துடன் துவங்கத் திட்டமிட்டுள்ளார்.  இந்த இயக்கத்துக்காக, ஐந்து முற்போக்குக் குழுக்களை அமைத்து நிதி திரட்டும் பணியில் ஹிலரி இறங்கியுள்ளார்.

இது தொடர்பாக ஹிலரி கிளின்டன் தனது ஆதரவாளர்களுக்கு ட்விட்டர், இ-மெயில் மூலமாக அழைப்பு விடுத்து, தனது புதிய அரசியல் நடவடிக்கைகுறித்தும், ட்ரம்ப்பின் நிர்வாகச் சீர்கேடுகள்குறித்தும் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close