Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்தியாவின் முகத்திரையைக் கிழிப்போம்' ...பாகிஸ்தான் ஆவேசம்!

குல்பூஷன் ஜாதவ் தூக்கு தண்டனை விவகாரத்தில் இந்தியாவின் முகத்திரையைக் கிழிப்போம் எனப் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குல்பூஷன்

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார் குல்பூஷன் ஜாதவ். அவருக்குப் பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இதையடுத்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு மனு தாக்கல் செய்தது.

இதனிடையே இன்று சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவுக்குத் தண்டனை அளிக்க தடை விதித்தது. மேலும் இறுதி முடிவு எடுக்கும்வரை எந்தவித நடவடிக்கையும் பாகிஸ்தான் எடுக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் நஃபீஸ் கூறுகையில், 'சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா உண்மையை மறைக்க முயல்கிறது. விரைவில் ஆதாரங்களைச் சமர்ப்பித்து இந்தியாவின் முகத்திரையைக் கிழிப்போம்' எனக் கூறியுள்ளார். மேலும் குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close