Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய விஞ்ஞானிக்கு இஸ்ரேலின் உயரிய விருது!

கலிஃபோர்னியா தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர், இந்திய விஞ்ஞானி ஶ்ரீனிவாஸ் குல்கர்னி. இவர் வான் இயற்பியல் துறையில் ஒரு முன்னோடியாக திகழ்கிறார். இவரது பூர்வீகம் மராட்டிய மாநிலம் ஆகும். இவருக்கு 'டேன் டேவிட் விருது' அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஶ்ரீனிவாஸ் குல்கர்னி

வானியல் ஆராய்ச்சித் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக இவருக்கும், வார்சா பல்கலைக்கழகத்தின் ஆனட்ரெஜ் உதால்ஸ்கை, நாசாவின் நீல் கேஹ்ரல்ஸ் ஆகிய 3 பேருக்கும், இஸ்ரேல் நாட்டின் ‘டேன் டேவிட்’ விருது கூட்டாக வழங்கப்படுகிறது. ‘டேன் டேவிட்’ விருது ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் ரொக்கப்பரிசுடன் கூடியது. இந்திய மதிப்பில் இது சுமார் ஆறரைக் கோடி ஆகும். டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் உள்ள 'டேன் டேவிட்' அறக்கட்டளைதான் இந்த விருதை வழங்குகிறது. இந்த விருது வழங்கும் விழா வரும் 21-ம் தேதி டெல் அவிவ் நகரில் நடக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close