Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலியல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து தப்பித்தார் விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ்சே!

ஸ்டாக்ஹோம் பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேனை விடுவித்து, ஸ்வீடன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூலியன் அசாஞ்சே

ஸ்டாக்ஹோம் பாலியல் பலாத்கார வழக்கில், சில ஆண்டுகளுக்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான வழக்கை ஸ்வீடன் நாட்டு உச்சநீதிமன்றம் கைவிடுவதாக அறிவித்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டில், ஜூலியன் அசாஞ்சே மீது இரு ஸ்வீடன் நாட்டுப் பெண்கள், பாலியல் பலாத்காரம் மற்றும் அத்துமீறல் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அசாஞ்சே மீது, ஸ்வீடன் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, தன்மீது சுமத்தப்பட்டிருந்த கைது ஆணையை நீக்குமாறு, ஸ்வீடன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அசாஞ்சேவின் மனு, நிராகரிக்கப்பட்டது. இதனால், தன்னை ஸ்வீடனுக்கு நாடு கடத்த உத்தரவிடுவார்கள் என உணர்ந்த அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈக்குவேடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்து தப்பித்து வந்தார்.

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதால், தன்னை ஸ்வீடன் அரசு அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான முயற்சியில் இறங்கும் என்பதால், தலைமறைவாகவே வாழ்ந்துவந்தார் ஜூலியன் அசாஞ்சே. தற்போது அவர், நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி, விசாரணையில் பங்குபெறுவது சாத்தியமில்லாததால், இந்த வழக்கைக் கைவிடுவதாக ஸ்வீடன் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், 2020-க்கு முன்னர், ஜூலியன் அசாஞ்சே ஸ்வீடன் நாட்டில் கால்பதித்தால், இந்த வழக்கு மீண்டும் உயிர்பெறும் என ஸ்வீடன் தெரிவித்துள்ளது.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close