Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் அணு ஆயுதங்கள்குறித்து பாகிஸ்தான் குற்றச்சாட்டு..!

'இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் இருப்பது தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது' என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா குறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்  நஃபீஸ் ஜக்காரியா, 'இந்தியா 10 ஆண்டுகளுக்கும் மேலாக அணுசக்தி எரிபொருள், இயந்திரங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அணு ஆயுதங்களை உற்பத்திசெய்கிறது. இந்தியாவின் இந்தச் செயல், தெற்காசியா மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவின் அணு ஆயுதக்குவிப்பு, உலகின் மற்ற நாடுகளைவிட வேகமானது. இதுவரை, இந்தியா சுமார் 2,600 அணு ஆயுதங்களை வைத்துள்ளது.

இதை, ஊடகங்களும் புள்ளிவிவரங்களும் மறைக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே அணுசக்தி நிபுணர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் ஊடகங்கள் இந்தியாவின் அணு ஆயுதங்கள்குறித்த மறைமுகத்தன்மைகுறித்தும், சர்வதேச பாதுகாப்புகுறித்தும், அணுசக்தியை அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்துவதுகுறித்தும் கேள்வி எழுப்புகின்றனர். காஷ்மீரில், ஆர்.எஸ்.ஆஸ். அமைப்பை காஷ்மீரி அல்லாதவர்களை வைத்து இந்திய அரசு கட்டமைக்கின்றது. காஷ்மீரிகளை அச்சுறுத்தி, அவர்களுக்கான தன்னாட்சி உரிமையை மறுக்கிறது. ஊடகங்கள், தொலைக்காட்சி, சமூக வலைதளங்களைத் தடுக்கிறது. இந்தியாவின் இந்தச் செயல்களை சர்வதேச சமூகம் கவனிக்க வேண்டும்' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close