Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.712 கோடிக்கு ஏலம்போன ஜான் மிஷெல் பாஸ்கியாவின் ஓவியம்!

அமெரிக்காவைச் சேர்ந்தவர், பிரபல ஓவியர் ஜான் மிஷெல் பாஸ்கியா. 1960-ல் பிறந்த இவர், 1988-ல் தனது 27வது வயதிலேயே காலமானார். நான்கு வயதிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்த பாஸ்கியாவின் ஓவியங்கள், கருப்பினத்தவரின் வறுமையைப் பிரதிபலித்தன. இளம் வயதிலேயே ஓவியங்கள்மூலம் புகழ்பெற்ற பாஸ்கியாவின் படைப்புகள், இன்றுவரை கொண்டாடப்பட்டுவருகின்றன. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில், பாஸ்கியாவின் ஓவியம் ஒன்று, இந்திய மதிப்பில் 712 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது இதற்கு சாட்சி.

ஓவியத்துடன் யுசாகு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த ஏலத்தில், பாஸ்கியாவின் ஓவியம் 110,487,500 டாலர் தொகைக்கு விற்பனையாகியுள்ளது. ஜான் மிஷெல் பாஸ்கியாவின் முந்தைய ஓவியங்களைவிட, இது அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ள ஓவியம். தவிர, அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்களால் வரையப்பட்டு விற்பனையான ஓவியங்களிலேயே, அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட படைப்பும் இதுவே. கருப்பினத்தைச் சேர்ந்த ஓவியரான ஜான் மிஷெல் பாஸ்கியாவின் பெயரிடப்படாத இந்த ஓவியத்தை, ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் யுசாகு மேஸாவா ஏலம் எடுத்திருக்கிறார். இதற்கு முன் அதிக தொகைக்கு ஏலம் போன பாஸ்கியாவின் ஓவியத்தை ஏலம் எடுத்தவரும் இவர்தான்.

கருப்பின ஓவியர்கள் வரைந்த ஓவியங்களிலேயே மிக அதிக தொகைக்கு ஏலம் போன ஓவியம், 1980-க்குப் பிறகு 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் ஓவியம் போன்ற பல சாதனைகளைப் படைத்திருக்கிறது இந்த ஓவியம். மனித மண்டை ஓட்டின் வடிவத்தைப் பிரதிபலிக்கும் இந்த ஓவியம், ஆயில் ஸ்டிக் மற்றும் ஸ்பிரே பெயின்ட்டுகளைக்கொண்டு வரையப்பட்டது. இந்த ஏலத்தை, அமெரிக்காவின் சோத்பிஸ் ஏல நிறுவனம் நடத்தியது. ''ஜான் மிஷெல் பாஸ்கியாவின் 'மாஸ்டர் பீஸ்' ஓவியத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. இதை அறிவிக்கவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஓவியத்தின்மீதான என் காதலை இந்த ஓவியம் இன்னும் அதிகப்படுத்தியது'' என, ஓவியத்தை ஏலத்தில் எடுத்த மகிழ்ச்சியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார், யுசாகு. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close