Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’அஜ்மல் கசாப்பை விட பயங்கரமான தீவிரவாதி குல்பூஷன் ஜாதவ்’: முஷாரப்

பாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவ், மும்பை தாக்குதலை நடத்திய அஜ்மல் கசாப்பை விட பயங்கரமான தீவிரவாதி என பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி முஷாரப் தெரிவித்துள்ளார்.

முஷாரப்


இந்திய முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் மீதான மரண தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது சர்வதேச நீதிமன்றம். இந்தியா இத்தீர்ப்பினை வரவேற்ற போதில், பாகிஸ்தான் இதற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தான் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.


முஷாரப் கூறியதாவது, ‘குல்பூஷன் ஜாதவ் கசாப்பை விட பயங்கரமான தீவிரவாதி. அஜ்மல் கசாப் ஒரு சிப்பாயாகத் தான் அத்தாக்குதலில் ஈடுபட்டான். ஆனால் குல்பூஷன் பாகிஸ்தானில் தீவிரவாதத்தைத் தூண்டி பலரது மரணங்களுக்கு பொறுப்பாளியாக இருக்கலாம்’ என்றார்.


குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியா சர்வதேச நீதிமன்ரத்தை நாடியது தவறு எனக் கூறிய முஷாரப் ’அதைவிட பெரிய தவறு பாகிஸ்தான் இந்த வழக்கில் ஆஜராக ஒப்புக்கொண்டது’ என்றார். மேலும் தன் ’நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் வேறு யாரும் தலையிடுவதற்கான எந்த உரிமையும் இல்லை’ என்றும் தெரிவித்தார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close