Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்த ஊருக்கு தான் சென்றார்!

அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் தன்னுடைய முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக சவுதி வந்துள்ளார் டொனால்டு ட்ரம்ப்.

ட்ரம்ப்


இன்று காலை 10 மணி அளவில் தன் மனைவி மெலானியா ட்ரம்ப் உடன் சவுதி அரேபியா வந்திறங்கினார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். சவுதி மன்னர் சல்மான் மற்றும் இதர முக்கிய அரச குடும்பத்தினர் அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்றனர்.


மே 20 முதல் 27-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளில் தான் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் பல நாடுகள் உடனான நல்லுறவினை மேம்படுத்தும் என நம்புகிறார். இன்று ரியாத்தில் இருக்கும் ட்ரம்ப், அடுத்தடுத்து ஜெருசலேம், பெத்லேகம், ரோம், வாடிகன் போன்ற நகரங்களுக்குச் செல்லவிருக்கிறார். 


சவுதி பயணத்திட்டப்படி, இஸ்லாம் குறித்து ட்ரம்ப் நாளை சிறப்புரை ஆற்றுகிறார். சுமார் 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக ஆயுத ஒப்பந்தம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close