Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ரான்சம்வேர் தாக்குதலை நடத்தவில்லை' : வடகொரியா மறுப்பு!

நமது கணினிகளில் உள்ள முக்கியத் தகவல்களை எடுத்து வைத்துக்கொண்டு, மிரட்டிப் பணம் பறிக்கும் தாக்குதல்தான் ரான்சம்வேர் மால்வேர் தாக்குதல்.  கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல், இந்தத் தாக்குதல்  நடத்தப்பட்டது. குறிப்பாக, ரான்சம்வேர் உலகம் முழுவதும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகளைத் தாக்கியது. இந்தியா உட்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகள், இந்தத் தாக்குதலுக்கு ஆளாகியதாகவும் தகவல் வெளியாகியது. இதுவரை நடந்த ரான்சம்வேர் தாக்குதல்களில் இந்த தாக்குதலே பெரியது எனவும் நிபுணர்களின் தரப்பில் கூறப்படுகிறது

Ransomware


ரான்சம்வேர்  தாக்குதலுக்கு வடகொரியாதான் காரணம் என்று கூறப்பட்டது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கணினி குறியீடுகள், வடகொரியா பயன்படுத்தும் குறியீடுகளை ஒத்து இருப்பதாக தொழில்நுட்ப நிபுணர்கள் கணித்தனர்.  இந்நிலையில், இதற்கு வடகொரியா மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஐக்கிய நாடுகளுக்கான வடகொரியாவின் துணைத்தூதர் கிம் இங் ரியோன், நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபையில், "இந்தத் தாக்குதலுக்கும் வடகொரியாவுக்கும் சம்பந்தம் இல்லை. உலகில் எங்கு இதுபோன்று தாக்குதல் நடந்தாலும் வடகொரியாவை, தொடர்புபடுத்துவது கேலிக்கூத்தாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close