Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சவுதியுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா..!

சவுதியின் பாதுகாப்புக்காக, 110 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

சவுதியில் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தன்னுடைய முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். இரு நாட்டு நல்லுறவுக்கும் வலு சேர்க்கும் வகையில் இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், நேற்று சவுதி சென்ற ட்ரம்ப், இன்று சவுதி மன்னர் சல்மான் உடன் இணைந்து, சுமார் 110 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஒப்பந்த உடன்படிக்கையின் மூலம் சவுதிக்குத் தேவையான நீண்டகால ஆயுத உபகரணங்கள், மற்றும் சேவைகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரானின் அச்சுறுதல்களிடமிருந்து, சவுதி மற்றும் வளைகுடா நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘அமெரிக்கா- சவுதி இடையேயான 70 ஆண்டுகளுக்கும் மேலான, நல்லுறவின் நீட்டிப்புதான் இந்த ஒப்பந்த உடன்படிக்கைகள்’ என்று கூறியுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close