Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் அணு ஆயுதச் சோதனை... அடம்பிடிக்கும் வடகொரியா!

வட கொரியா, தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவருகிறது. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலும் அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இருப்பினும், வட கொரியா நிறுத்துவதாக இல்லை. வட கொரியாவின் இந்த மோதல் போக்கு, பெரும் சேதத்தில் போய் முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் எச்சரித்திருந்தார். 

North Korea


குறிப்பாக, அந்த நாட்டுக் கப்பல்களை, கொரிய தீபகற்பத்துக்கு அருகே நிறுத்தியது அமெரிக்கா. சிரியாமீது தாக்குதல், ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் நிலைகள் மீது தாக்குதல் என, இரண்டு தாக்குதல்களுக்குப் பின், வட கொரியாவை நேரடியாக எச்சரித்தது அமெரிக்கா. ஆனால், இவை எதையும் வட கொரியா கண்டுகொள்வதாய் இல்லை.


அந்த நாடு, தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவருகிறது. கடந்த வாரம், அந்த நாடு நடத்திய ஏவுகணைச் சோதனைக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று ஒரு ஏவுகணைச் சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. இதை, தென் கொரிய ராணுவம் மற்றும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உறுதிசெய்துள்ளது. 


இதுகுறித்து தென் கொரிய ராணுவம், "அணு ஆயுதங்களைத் தாங்கிச்சென்று தாக்கும் ஏவுகணைச் சோதனை ஒன்றில், வட கொரியா ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டது. கடலில் விழுவதற்கு முன், சுமார் 310 மைல் தூரத்துக்கு அந்த ஏவுகணை பறந்தது. இதனால், நாங்கள் பயப்படவில்லை. எங்களது ராணுவம், எப்போதும் தயார் நிலையில் உள்ளது" என்று கூறியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close