Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்!

இந்தியாவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மீது ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

pradeep

ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதல்கள் கடந்த சில வருடங்களாகவே அதிகளவில் நடந்து வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அங்கு அடிக்கடி அரங்கேறி வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவைச் சேர்ந்த மேக்ஸ் ஜாய் என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு இந்தியர் தாக்கப்பட்டுள்ளார். பகுதி நேர டாக்ஸி ஓட்டுநரான பிரதீப் சிங் மீது இந்த கொடூரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. 

கடந்த சனிக்கிழமை இரவு பிரதீப்பின் காரில் ஒரு காதல் ஜோடி ஏறியுள்ளது. காரில் வந்த பெண்ணுக்கு வாந்தி வந்ததால், அவர் ஓடும் கார் கதவை திறந்து வாந்தி எடுத்துள்ளார். காருக்கு எதாவது ஆனால் அபராதம் கட்டவேண்டும் என பிரதீப் எச்சரித்துள்ளார். இதனால் அத்திரமடைந்த அந்த ஜோடி, பிரதீப் சிங்கை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், காரில் வந்த பெண், பிரதீப் சிங் இந்தியர் என்பதால் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், அவர்கள் இந்தியர்களை இழிவாக பேசியதாகவும் பிரதீப் சிங் கூறியுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஆஸ்திரேலிய காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close