Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடரும் ஏவுகணைச் சோதனை... வடகொரியாவுக்கு ஐ.நா கடும் கண்டனம்!

வட கொரியாவின் ஏவுகணைச் சோதனைகளுக்கு ஐ.நா சபையின் செய்தித்தொடர்பாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

North korea

வட கொரியா, சமீபத்தில் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்துசென்று தாக்கும் ‘புக்குக்சோங்’ எனும் ஏவுகணைச் சோதனையை நடத்தியது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. இந்த எதிர்ப்பைக் கண்டுகொள்ளாத           வட கொரியா, தொடர்ச்சியாகப் பலகட்ட ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாயின. இதனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல, வட கொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

இந்த நிலையில், வட கொரியாவின் நடவடிக்கைக்கு ஐ.நா சபையின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீஃபன் டுஜாரிக் “வட கொரியாவின் தொடர் ஏவுகணைச் சோதனைகள், சர்வதேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்று, அவரது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close