Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இங்கிலாந்தில் குண்டுவெடிப்பு  - 19 பேர் பலி; 50 பேர் படுகாயம்



இங்கிலாந்து நாட்டின், மான்செஸ்டர் பகுதியில், பாப் இசைக் கச்சேரி நடைபெறும் இடத்தில் திடீரென குண்டுவெடித்தது.  அதில், 19 பேர் பலியாகியுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 


இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. அந்த இசைக் கச்சேரியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது அந்த இடத்தில், திடீரென குண்டுவெடித்தது.  அதில் 19 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தற்கொலைப் படைமூலம் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய நேரப்படி, நேற்று இரவு 10.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

 

இந்தச் சம்பவத்துக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close