Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இங்கிலாந்தில் குண்டுவெடிப்பு! அதிரவைத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் ட்விட்டர் பதிவு!

இங்கிலாந்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு முன்னரே ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் டிவிட்டரில் குண்டு வெடிப்பு நிகழப் போவதை எச்சரித்துள்ளார்.

ஐ.எஸ்

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 19 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தற்கொலைப் படைமூலம் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என கூறப்பட்டு வந்தது. மேலும் பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதலில் இது ஒரு பகுதியாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.

ஐ.எஸ்

இதனிடையே, இங்கிலாந்து குண்டுவெடிப்புக்கு முன்னரே ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர், 'எங்கள் எச்சரிக்கையை மறந்து விட்டீர்களா. இன்னும் நிறைய உள்ளது' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் குண்டுவெடிப்பு காரணமான ஒருவர் வேறு ஒரு வலைத்தளத்தில்,' இன்று மான்சேஸ்டர் கச்சேரிக்குச் சென்று குண்டு வெடிப்பை நிகழ்த்த உள்ளேன். பலர் இறப்பார்கள்' என பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவுகளை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close