Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீனாவை முந்தியது இந்தியா! எதில் தெரியுமா?

சீன மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் (demographer) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கணிப்புகளை முறியடித்து சீனாவை பின்னுக்குத்தள்ளி மக்கள் தொகையில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

மக்கள்தொகை

மக்கள் தொகையில் தற்போது சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துவிட்டதாகக் சீனாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் யீ ஃபூக்‌ஷியன் கூறியுள்ளார். கணக்கீடுகளைப் பொய்யாக்கி ஐந்து வருடங்களுக்கு முன்னதாகவே இந்த மக்கள்தொகை எண்ணிக்கையை இந்தியா அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த சீன ஆய்வாளரின் கணக்கின்படி இந்தியா 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

சீன அரசின் குடும்பக் கட்டுப்பாடு முறைகளையும், சீனாவில் வயதானோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அறிவித்த விமர்சகர் யீ ஃபூக்‌ஷியன், தற்போது இந்திய- சீன மக்கள்தொகை நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சீனாவின் பல அறிஞர்கள் இந்த மக்கள் தொகைப் பெருக்கத்தை ஒரு அபாய எச்சரிக்கையாகவே பார்க்கின்றனர். இவ்வாறு பெருகி வரும் மக்கள்தொகையால் உலகில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close