Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குல்பூஷன் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்: பாகிஸ்தான் கோரிக்கை!

பாகிஸ்தான் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவ் வழக்கினை விரைந்து விசாரிக்க வேண்டும் என பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குல்பூஷன் ஜாதவ்

உளவாளி என சந்தேகித்து பாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ். இவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்குத் தடை விதிக்கக் கோரி ஐநா-வின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை அறிவித்தது. இத்தீர்ப்பினை இந்தியா வரவேற்ற போதும் பாகிஸ்தான் கடும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்தது.

இந்நிலையில், இன்னமும் விசாரணை நிலுவையில் உள்ள குல்பூஷன் வழக்கினை விரைந்து விசாரிக்க வேண்டுமென்று  ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்திடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி வரும் நவம்பர் மாதம் மாறவிருப்பதால் அதற்குள் வழக்கினை முடிக்க பாகிஸ்தான் விரும்புவதாகத் தெரிகிறது. முன்னதாக குல்பூஷன் ஜாதவின் வழக்கு வருகிற அக்டோபர் மாதம் விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், பாகிஸ்தான் இன்னும் ஆறு வார காலங்களில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close