Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விசா காலம் முடிந்தும் அமெரிக்காவில் எத்தனை இந்தியர்கள் தங்கி இருக்கிறார்கள் தெரியுமா?

'தங்களுடைய விசா காலம் முடிந்தும் அமெரிக்காவிலேயே தங்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 30,000 பேர்' என்று அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை, நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்துள்ளது


அமெரிக்க அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை, அந்நாட்டுக்கு பல்வேறு காரணங்களுக்காக வந்த வெளிநாட்டவர்கள் குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தது. அந்த அறிக்கையில், 'கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவுக்குப் பல்வேறு காரணங்களுக்காக சுமார் 15 லட்சம் இந்தியர்கள் சென்றுள்ளனர். அதில், பெரும்பாலானவர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஆனால், சுமார் 30,000 இந்தியர்கள் விசா காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவிலேயே தங்கி உள்ளனர். மேலும், 6,000 பேர் தங்களுடைய விசா காலம் முடிந்த பிறகே இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 9,897 மாணவர்கள் 2016-ம் ஆண்டுடன் விசா காலம் முடிந்து இந்தியாவுக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் 4,545 பேர் விசா காலம் முடிவடைந்தும் இன்னமும் அமெரிக்காவிலேயே இருப்பதாக' அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close