Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு..!

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில், இன்று அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். 


இரு தினங்களுக்கு முன்னர், இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள பேருந்து நிலையம் அருகே, இன்று அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்தக் குண்டுவெடிப்பில், போலீஸ் அதிகாரி உட்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர். ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களை, போலீஸார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஜகார்த்தாவில் நடந்த இந்தக் குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்று இதுவரை தெரியவில்லை. எந்த அமைப்பும் இதற்குப் பொறுப்பேற்கவில்லை. இது, தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close