Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளித்த தைவான்..!

ஆசியக் கண்டத்தில் முதன்முறையாக, தைவான் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம்செய்துகொள்ள அந்நாட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 


ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் குறித்த வழக்கு, தைவான் நாட்டின் முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை,'திருமணம்செய்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் அதற்கான உரிமையும் சுதந்திரமும் உண்டு. ஓரினச் சேர்க்கையாளர்கள் இருவர், தங்களது உறவை நிரந்தரமாகத் தொடர விரும்பினால், அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம். அந்தத் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ள உரிமை உண்டு' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தைவான் நாட்டைப் பொறுத்தவரை, அதிகளவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருக்கின்றனர். கடந்த 30 வருடங்களாக, ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களது திருமணத்துக்கு அங்கீகாரம் வேண்டும் என்று போராடிவந்தனர். இந்நிலையில், அந்நாட்டு நீதிமன்றம் அவர்களது திருமணத்தை அங்கீகரித்துள்ளது. மேலும், அதற்கான சட்டத்தை இரண்டு ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்நாட்டு அரசுக்கு, நீதிமன்றம் பரிந்துரைசெய்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close