Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மான்செஸ்டர் தாக்குதல் : பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய செல்போன்!

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் மைதானத்தில், அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது, திடீரென சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. தற்கொலைப்படைத் தாக்குதல்மூலம் நடத்தப்பட்ட இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இதையடுத்து, மான்செஸ்டர் குண்டு வெடிப்பில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். 

இந்நிலையில், அந்த சம்பவத்தின் போது செல்போனால் பெண் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். சம்பவம் நடந்தபோது, லிசா பிரிட்கெட் என்ற பெண், செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.


அப்போது, இரும்புத்துண்டு ஒன்று சிதறி இவர்மீது விழுந்துள்ளது. ஆனால், செல்போன் பேசிக்கொண்டிருந்ததால் இவரை இரும்புத் துண்டு நேரடியாகத் தாக்கவில்லை. இரும்புத்துண்டு தாக்கியதில், லிசாவின் செல்போன் உடைந்துவிட்டது. மேலும், அவரின் கை, கன்னம், மூக்கு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.


இதையடுத்து, படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. 'அந்த இரும்புத்துண்டு லிசாவை நேரடியாகத் தாக்கியிருந்தால், அவர் உயிர் பிழைத்திருக்க முடியாது' என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close