Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தாண்டும் கல்வியில் இந்த நாடுதான் டாப்!

உலகின் கல்வித்திறன் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 44-வது இடத்தில் உள்ளது. 

singapore

உலகப் பொருளாதார பேரமைப்பு (World Economic Forum) 2016 - 2017 ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளின் போட்டித்திறன் குறித்த மதிப்பீட்டையும் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. 138 நாடுகள் கொண்ட  இந்தப் பட்டியலில் முன்னிலையில் உள்ள நாடுகள் கல்வித் தரத்தில் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி கல்வித்தரத்தில் சிங்கப்பூர் முதல் இடத்திலும், ஸ்விட்சர்லாந்து இரண்டாம் இடத்திலும், கத்தார் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்தியா 44 இடத்தில் உள்ளது. அமெரிக்கா 16-வது இடத்தில் உள்ளது. ஏமன் கடைசி இடத்தில் உள்ளது. ஆசிய நாடான சிங்கப்பூரில் பின்பற்றப்படும் சிறப்பான கல்வி முறையே உலகளவில் கல்வித்தரத்தில் முன்னிலை வகிப்பதற்கு காரணம் என்று உலகப் பொருளாதார பேரமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டும் கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close