Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப் ஆட்சியில் நீதித் துறையில் உயர் பதவி பெறும் முதல் இந்தியர்..!

அமெரிக்காவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமுல் தாப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் இந்திய நீதிபதி

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ஒரு இந்திய வம்சாவளி நபருக்கு நீதித்துறையில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மேல்முறையீட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமுல் தாப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இந்தப் பதவியினைப் பெறும் இரண்டாவது இந்தியர் அமுல் தாப்பர்.

முன்னதாக அமுல் தாப்பர் கென்டகி மாகாணத்தில் கிழக்கு மாவட்ட நீதிபதியாக 2007-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அந்தச் சமயம் அதிகாரமிக்க நீதிமன்றம் ஒன்றின் நீதிபதி பதவியை பிடித்த முதல் தெற்கு ஆசியர் என்ற பெருமை தாப்பர் பெற்றார். கடந்த மார்ச் மாதம் மேல்முறையீட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டவருக்கு நாடாளுமன்ற செனட் சபை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close