Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கையை புரட்டிப்போட்ட கனமழை: 91 பேர் பலி.. 110 பேரை காணவில்லை

srilanka flood

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெய்து வரும் கடும் மழையினாலும், மண் சரிவு ஏற்பட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்னபுரி, களுத்துறை, பெல்மடுல்ல உள்ளிட்ட பகுதிகளில் இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக தெரிகிறது. மேலும், 110 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மலைப்பகுதிகளில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close