Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வட கொரியா பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும்!'- ட்ரம்ப் உறுதி!

ட்ரம்ப்

வட கொரியா, அமெரிக்கா இடையில் கடந்த பல மாதங்களாக நடந்துவரும் பனிப்போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்நிலையில், 'வட கொரியாவுடனான பிரச்னைக்குக் கண்டிப்பாக தீர்வு எட்டப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரு நாட்டுக்கும் இடையில் சச்சரவுகள் எழ காரணம், வட கொரியா அணு ஆயுத சோதனைகளை தன்னிச்சையாக நடத்தியதுதான். 'வட கொரியா அனுமதியின்றி அணு ஆயுத சோதனைகள் எதுவும் நடத்தக் கூடாது' என்பதுதான் முதலில் இருந்தே அமெரிக்காவின் கோரிக்கையாக இருந்துவருகிறது. ஆனால், வட கொரியாவோ தொடர்ச்சியாக அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் எச்சரிக்கையை புறந்தள்ளி, அணு ஆயுத சோதனைகள் நடத்தி வந்தது. இரு தரப்புகளும் சில நாள்களுக்கு முன் சுமூக பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறிய நிலையில், வட கொரியா மீண்டும் தொலைதூரம் சென்று குறிவைத்துத் தாக்கும் ஏவுகணையை சோதனை செய்தது.

இதனால், இரு தரப்புக்கும் இடையில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவைச் சந்தித்தார். சந்திப்புக்குப் பின் ட்ரம்ப், 'நாங்கள் பல விஷயங்கள் குறித்து விவாதித்தோம். அதில் வட கொரிய பிரச்னை முக்கிய இடம் வகித்தது. வட கொரிய பிரச்னை என்பது மிகப் பெரியது. அது ஒரு உலகப் பிரச்னை. ஆனால், அது தீர்க்கப்படும். நிச்சயமாக தீர்க்கப்படும்' என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close