Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எந்தெந்த நாட்டு மக்கள் எவ்வளவு இறைச்சி சாப்பிடுகிறார்கள்? #MustKnow #BeefBan

இறைச்சி

சில தினங்களுக்கு முன் மத்திய அரசு, மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது. ஆனால், அந்தத் தடையை இந்தியாவின் பல பகுதிகளிலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளத்தில், அந்தத் தடைக்குப் பின்னர்தான் மாட்டிறைச்சி விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதிலும் கேரளாவில், மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கென்று தனியாக விழாவே நடத்திவிட்டனர். மாட்டிறைச்சி என்பது இந்தியாவில் மட்டுமல்ல... உலகம் முழுவதுமுள்ள மக்களால் விரும்பி உண்ணக்கூடிய ஓர் உணவாக இருக்கிறது.

ஆடு, மாடு, கோழி, பன்றி என அனைத்து விலங்குகளின் இறைச்சிகளுமே மனிதர்களுக்குப் பிடித்த அசைவ உணவாக இருக்கின்றன. இந்த வகையில் ஒவ்வொரு நாட்டிலும், ஒரு தனிமனிதன் ஆண்டுக்கு எவ்வளவு இறைச்சி உட்கொள்கிறான்? குறிப்பாக மாட்டிறைச்சி எவ்வளவு எடுத்துக்கொள்கிறான்? என்பது போன்ற புள்ளி விவரங்களை தெரிந்துகொள்வோமா? (2014 ஆம் ஆண்டின்படி கணக்கெடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பானது OECD(Organisation for Economic Co-operation and Development)யை ஆதாரமாகக் கொண்டது.)

1. ஆஸ்திரேலியா : 

ஆஸ்திரேலியா

இறைச்சிகளை அதிகமாக விரும்பி உண்ணுவதில், ஆஸ்திரேலியா நாட்டு மக்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். இங்கு தனியொரு மனிதன் சராசரியாக ஆண்டுதோறும் 92.98 கிலோ கிராம் இறைச்சிகளை உணவாக எடுத்துக்கொள்கிறான். அவற்றுள் மாட்டிறைச்சி 21.57 கிலோ கிராமும், கோழிக்கறி 39.57 கிலோ கிராமும், பன்றிக்கறி 20.09 கிலோ கிராம் ஆகும். மீதமுள்ளவை இதர இறைச்சி வகை உணவுகளிலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.
மாட்டிறைச்சி உண்பதில் ஆஸ்திரேலியா, உலக நாடுகளில் 5-வது இடத்தில் உள்ளது.

2. அமெரிக்கா :

அமெரிக்கா

இறைச்சி உண்ணுவதில் அமெரிக்கர்கள் அதிகம் விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அமெரிக்கா இறைச்சி உண்ணுதலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. சராசரியாக 90 கிலோகிராம் எடையுள்ள இறைச்சிகளை ஒரு மனிதன் ஓர் ஆண்டில் எடுத்துக்கொள்கிறான். அமெரிக்க நபர்கள் ஓர் ஆண்டில் 24.45 கிலோ கிராம் மாட்டிறைச்சி, 44.49 கிலோ கிராம் கோழிக்கறி, 20.72 கிலோ கிராம் பன்றிக்கறி மற்றும் இதர இறைச்சி வகைகளை உணவாக எடுத்துக்கொள்கின்றனர். மாட்டிறைச்சியை அதிகமாக உண்பவர்களில் உலகளவில், அமெரிக்கா 4-வது இடத்தில் இருக்கிறது.

3. அர்ஜென்டினா :

அர்ஜென்டினா

அர்ஜென்டினாவில், ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் சராசரியாக 86 கிலோ கிராமுக்கும் அதிகமான எடையுள்ள இறைச்சிகளை உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால், இறைச்சியை அதிகமாக உண்போர் பட்டியலில் அர்ஜென்டினா 3-வது இடத்தில் இருக்கிறது. இங்கு 41.55 கிலோ கிராம் மாட்டிறைச்சியும், 35.11 கிலோ கிராம் கோழிக்கறியும், 8.7 கிலோ கிராம் பன்றிக்கறியும் உணவாக உட்கொள்கிறார்கள். உலகிலேயே அதிகளவிலான மாட்டிறைச்சியை உணவாக எடுத்துக்கொள்பவர்களில் அர்ஜென்டினாதான் முதலிடத்தில் இருக்கிறது. 

3. இஸ்ரேல் :

இஸ்ரேல்

இறைச்சி உண்பவர்களில் 4-வது இடத்தில் இருக்கும் நாடு இஸ்ரேல். இங்கு ஆண்டுதோறும் ஒவ்வொருவரும் 84 கிலோ கிராமுக்கும் அதிகமான எடையுள்ள இறைச்சியை உணவாக உட்கொள்கிறார்கள். மேலும் இங்கு ஒரு மனிதன் ஓர் ஆண்டுக்கு 19.2 கிலோ கிராம் மாட்டிறைச்சியை உணவாக எடுத்துக்கொள்கிறான்.

5. பிரேசில் :

பிரேசில்

இஸ்ரேலுக்கு அடுத்தப்படியாக இறைச்சியை அதிகமாக உண்ணும் வரிசையில், பிரேசில் 5-வது இடத்தில் உள்ளது. இந்த நாட்டில், ஒரு தனி மனிதன் ஆண்டுதோறும் 78 கிலோ கிராமுக்கும் அதிகமான எடையுள்ள இறைச்சியை உணவாக எடுத்துக்கொள்கிறான். இங்கு ஒவ்வொருவரும் சராசரியாக 26.99 கிலோ கிராம் மாட்டிறைச்சியை உணவாக எடுத்துக்கொள்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close