Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியா- ஜெர்மனி இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

அரசுமுறை சுற்றுப்பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் உடன் இணைந்து இருநாட்டு நல்லுறவுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் எட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தியா- ஜெர்மனி

பிரதமர் மோடி ஆறுநாள் சுற்றுப்பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணமாகியுள்ளார். முதலாவதாக ஜெர்மனி நாட்டிற்கு நேற்று சென்ற மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலைச் சந்தித்தார். இன்று இரு நாடுகளுக்கும் இடையே எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இருநாட்டு நல்லுறவுகளுக்கும் வலுசேர்க்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ‘இந்தியா- ஜெர்மனி இடையேயான உறவு மற்ற நாடுகளுக்கும் பயனளிக்கும். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஜெர்மனியின் ஒத்துழைப்பு அவசியம். திறன் மேம்பாட்டிலும், இன்னும் பிற வளர்ச்சிகளும் ஜெர்மனியில் சிறந்து விளங்குகிறது. இதனாலேயே ஜெர்மனி நாட்டில் உள்ள இளைஞர்கள் பெரும் பயனடைகிறார்கள். இதன்மூலம் இந்திய இளைஞர்களும் பயன்பெறலாம். இதேபோல் இந்தியாவிலும் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இதனால் ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய ஜெர்மனி முன்வர வேண்டும்’ என்றார்.

முன்னதாக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலிடம், தனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார் மோடி. இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு, இரு நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவிலிருந்து பிரதமர் மோடியுடன் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடன் சென்றுள்ளார். 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close