Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மான்செஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதல்... நிதி திரட்டும் ஜஸ்டின் பீபர்!

மான்செஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதலில் பாதிப்படைந்தோருக்கு நிதி திரட்ட, இசைக் கச்சேரி ஒன்று நடைபெற உள்ளது.

ஜஸ்டின்

கடந்த 22ஆம் தேதி, இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. மேலும், உலகம் முழுவதிலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

இந்நிலையில், வெடிகுண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு நிதி திரட்ட, இசைக் கச்சேரி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரபல பாப் இசைக் கலைஞர்கள் ஜஸ்டின் பீபர், கேட்டி பெர்ரி, மைலி சைரஸ் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் இந்த இசைக் கச்சேரியில், அரினா கிராண்டியும் கலந்துகொள்கிறார். இங்கிலாந்து நாட்டில் உள்ள ஓல்டு ட்ரஃபோர்டு மைதானத்தில் இந்த இசைக் கச்சேரி நடைபெற உள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close