Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐஸ்கிரீம் சாப்பிட வந்தவர்களைக் கொன்றுகுவித்த ஐஎஸ் தீவிரவாதிகள்!

ஈராக்கில், இரு இடங்களில் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில், அப்பாவி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக்

Photo: ANI

ஈராக் தலைநகர் பாக்தாத்தில், ரமலான் நோன்பு கழிக்,க ஐஸ்கிரீம் கடைக்கு சில இஸ்லாமியக் குடும்பங்கள் சென்றுள்ளன. அப்போது, அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.  அதில், 17 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.  ஐஸ்கிரீம் கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வைக்கப்பட்டு, ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு, ஐஎஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இதனிடையே, ஈராக்கில் கரடா மாவட்டத்தில் நிகழ்ந்த மற்றொரு வெடிகுண்டுத் தாக்குதலில், 14 பேர் பலியாகியுள்ளனர்.  அதில், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரமலான் பண்டிகைக் காலம் தொடங்கும் இந்த வேளையில், ஈராக்கில் தொடர் தாக்குதல் நிகழ்த்தப்படுவது, அந்தப் பகுதி மக்களிடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ரமலான் பண்டிகையின்போது ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில், 300-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close