Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காபூல் இந்தியத் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: இந்தியர்களுக்குப் பாதிப்பில்லை என சுஷ்மா ட்விட்!

காபூல் இந்தியத் தூதரகம் அருகே நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், காயமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காபூல் குண்டுவெடிப்பு


ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், இன்று காலை இந்தியத் தூதரகம் அருகே குண்டு வெடித்தது. காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தோர் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை 50 ஆக இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின்றன. இந்தியத் தூதரகக் கட்டடம் சேதமடைந்தபோதிலும், அங்கு உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

இதுகுறித்த தகவல்களை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். அதில், ‘கடவுள் அருளால் காபூல் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இந்தியத் தூதரகப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்’ எனப் பதிவுசெய்துள்ளார்.

அதிபர் மாளிகை, பல நாட்டுத் தூதரகங்கள் மற்றும் அரசுக் கட்டடங்கள் நிறைந்துள்ள பகுதியில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுவரை நடந்த குண்டுவெடிப்புகளுக்கு, உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தது, ஐஎஸ்ஐஎஸ் இயக்கம். ஆனால், இந்தச் சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த வருடத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் அதிகம் பேர் பலியானோர் பட்டியலில் காபூல் நகரம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close