Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏவுகணைச் சோதனை: வட கொரியாவுக்கு அமெரிக்கா தகுந்த பதிலடி!

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தொடர் ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டுவரும் வட கொரியாவுக்கு, தக்க பதிலடி தரும் வகையில், பாதுகாப்பு ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்கா- வடகொரியா

வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகள் தொடர்ந்த வண்ணம் இருப்பது தென்கொரியா, ஜப்பான் போன்ற அண்டை நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. ஐ.நா சபை உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தன. இந்நிலையில், அமெரிக்கா புதிய ஏவுகணைச் சோதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கக்கூடிய, புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவின் இந்தப் புதிய ஏவுகணைச் சோதனை, கலிஃபோர்னியா மாகாணத்தில் நிகழ்த்தப்பட்டது. பசிபிக் பெருங்கடலுக்கு அருகிலுள்ள ஒரு தீவிலிருந்து ஏவப்பட்ட தாக்குதல் ஏவுகணை மாதிரியை, அமெரிக்காவின் பாதுகாப்பு ஏவுகணை மறித்துத் தாக்கி அழித்தது. இதை, அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகம், ‘பென்டகன்’ உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் வட கொரியா தொடர்ச்சியாக ஒன்பது ஏவுகணைச் சோதனைகளை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close