Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதினின் நெஞ்சைத் தொட்ட மோடி... உருகிய ரஷ்ய அதிபர்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பல நாடுகளுக்குத் தொடர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் ரஷ்யாவில் இருக்கிறார். இன்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை நேரில் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் சர்வதேச அளவிலான விஷயங்கள் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது. முக்கியமாக, இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே, ஐந்து ஒப்பந்தங்களில் கையெழுத்தானது. 

மேலும், கூடங்குளம் அணு உலையில் கடைசி இரண்டு யூனிட்டுகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தில், பிரதமர் மோடி கையெழுத்திடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஏற்கெனவே கூடங்குளத்தில் இருக்கும் அணு உலைகள் தொடர் பழுது காரணமாக அடிக்கடி நிறுத்தப்படுவதால், 'மோடி அணு உலை தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடாது' என்றும் ஒரு சாரார் வலியுறுத்தி வருகின்றனர். 

புதினுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி, 'சாதரணமாக, சர்வதேச அளவிலான உறவில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்பதை வரலாற்றைப் பார்த்தால் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், ரஷ்யா உடனான இந்திய உறவு என்பது அப்படிப்பட்ட மாறுதல்கள் இல்லாத ஒன்று.' என்று கூறினார்.

மோடி புதினின் மனதைத் தொடும்படி, 'உங்கள் குடும்பம் பல தியாகங்களைச் செய்துள்ளன. உங்கள் சகோதரர் ராணுவ வீரராக இருந்து வீரமரணம் அடைந்துள்ளார்' என்றார். புதினின் சகோதரர், 70 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்டதைத்தான் மோடி, இவ்வாறு கூறினார்.

இதைக் கேட்டு நெகிழ்ந்த புதின், 'நீங்கள் எங்கள் நாட்டுக்கு வந்தமைக்கு நன்றி. போரால் பலியானவர்கள் கல்லறைக்கு நீங்கள் சென்றது எங்கள் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிடும்.' என்று உருகியுள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close