Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த இசைக் கச்சேரி டிக்கெட்டுகள்!

மான்செஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதலில் பாதிப்படைந்தோருக்கு நிதி திரட்ட நடைபெறும் 'ஒன் லவ் மான்செஸ்டர்' இசைக் கச்சேரியின் டிக்கெட்டுகள், 6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளன.

isai

கடந்த 22 ஆம் தேதி, இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரியில், சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டுத் தாக்குதலில், 22 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. மேலும், உலகம் முழுவதிலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து, வெடிகுண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு நிதி திரட்ட, இசைக் கச்சேரி நடத்தத் திட்டமிடப்பட்டது.

 இசைக் கச்சேரிக்கான டிக்கெட்டுகள், 6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் விற்பனை, நேற்று காலை ஆன்-லைனில் தொடங்கியுள்ளது. விற்பனை தொடங்கிய 6 நிமிடங்களில்  45,000 டிக்கெட்டுகள் விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. வெடிவிபத்தின்போது இசைக் கச்சேரி நடத்திய அரினா கிராண்டி மற்றும் பிரபல பாப் இசைக் கலைஞர்கள் ஜஸ்டின் பீபர், கேட்டி பெர்ரி, மைலி சைரஸ் உள்ளிட்டோர், இந்த இசைக் கச்சேரியில் கலந்துகொள்கின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close