Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிலிப்பைன்ஸில் ஐஎஸ் இயக்கம் கொலைவெறித் தாக்குதல்!

பிலிப்பைன்ஸில், ரிசார்ட் ஒன்றில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஐ.எஸ்

உலகம் முழுவதிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது ஐஎஸ் திவிரவாத இயக்கம். சிரியா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்திவரும் ஐஎஸ் தீவிரவாதிகள், சமீப காலமாக பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைக் குறிவைத்துவருகின்றனர். கடந்த மாதம் 22 ஆம் தேதி, மான்செஸ்டரில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கடும் அதிர்வலைகளைக்  கிளப்பியது.

இதனிடையே,  பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மணிலாவில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் இந்த கொலைவேறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், திடீரென்று ரிசார்ட்டில் நுழைந்து, ஐஎஸ் இயக்கத்தின் பேரை உச்சரித்துவிட்டு கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சூட்டுள்ளனர். இதில், சுமார் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close