Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிலிப்பைன்ஸை பதறவைத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்: 34 பேர் பலியான சோகம்!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், ஐஎஸ்ஐஎஸ் நடத்திய திடீர் தாக்குதலில் 34 பேர் பலியாகியுள்ளதாகவும், 54 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

மணிலா தக்குதல்

உலகம் முழுவதிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது, ஐஎஸ்  தீவிரவாத இயக்கம். சிரியா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்திவரும் ஐஎஸ் தீவிரவாதிகள், சமீப காலமாக பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைக் குறிவைத்துவருகின்றனர். கடந்த மாதம் நடந்த மான்செஸ்டர் தாக்குதல்மூலம் அதிர்வலைகளைக் கிளப்பிய பயங்கரவாதிகள், தற்போது பிலிப்பைன்ஸ் தலைநகரை குறிவைத்துத் தாக்கியுள்ளனர்.

மணிலாவில் இருக்கும் காசினோ காம்ப்ளெக்ஸ் ஒன்றில் இந்த கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மணிலா நகரின்  மிகப் பெரிய காசினோ ரிசார்ட்டில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் திடீரென்று  நுழைந்து, ஐஎஸ் இயக்கத்தின் பெயரை உச்சரித்துவிட்டு, கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சூட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 54 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுவருகின்றன.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த சில நிமிடங்களிலேயே ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close