Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புவி வெப்பத்தை தடுக்கும் ஒப்பந்தம், ட்ரம்ப்பை ஏன் சூடாக்குகிறது? #ParisClimateDeal

ட்ரம்ப்

தொழில்புரட்சியின் காரணமாகத்தான் பூமி வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதைக் கட்டுக்குள் வைப்பதற்காக உலக நாடுகள் இனைந்து உருவாக்கியதுதான் பாரீஸ் ஒப்பந்தம். இதில் கையெழுத்திட்ட நாடுகள் தங்களது கார்பன் வெளியீட்டை குறைத்தே ஆக வேண்டும். அதற்காக மாற்று எரிபொருளை நாட வேண்டியது அவசியம். இது தனது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் எனச் சொல்லி இதிலிருந்து வெளியேறியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். “என்னுடைய தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று” என டிரம்ப் சொன்னாலும், இந்த முடிவுக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு அதிகரித்திருக்கிறது. 

அது என்ன பாரீஸ் ஒப்பந்தம்?

உலகம் இயந்திரமயம் ஆனதால் ஒவ்வொரு நாடும் நிறைய கார்பனை வெளியேற்ற வேண்டியிருந்தது.  பொருளாதார ரீதியாக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் நாம், அதேசமயம் நம் பூமியை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதை நாம் உணரவே பல காலம் ஆகிவிட்டது. தொழில்புரட்சிக்கு முன்னால் இருந்ததை விட பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரிக்கும் அதிகமாக ஏறியது. பல லட்ச ஆண்டுகளாக பாழ்படாத பூமி சில நூறு ஆண்டுகளிலே சூடானது. இதைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து உலக நாடுகள் கூட்டாக இயற்றியதுதான் பாரீஸ் ஒப்பந்தம்.

பாரீஸ் ஒப்பந்தத்தின் நோக்கம், புவியின் வெப்பநிலையை 2 டிகிரி அளவுக்கு குறைக்க வேண்டும் என்பதே. இதற்காக ஒவ்வொரு நாடும் தனது கார்பன் வெளியீட்டை குறைக்க வேண்டும். இது மிகப்பெரிய சவாலான விஷயம். ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தை நேரிடையாக பாதிக்கக்கூடிய விஷயம். ஆனால், இந்தப் பூமி நீடித்து நிலைக்க, இது அவசியம் என்றனர் விஞ்ஞானிகள். இந்த ஒப்பந்தம் சுற்றுச்சூழலை காக்கும் நடவடிக்கைதான். ஆனால், இயற்கை எரிவாயு வியாபாரம் செய்யும் நாடுகள் மற்றும் பெரிய நிறுவனங்களின் அடிமடியில் கைவைக்கும் சமாச்சாரம். அவர்களுக்கு நட்டத்தை கொடுக்கும் நடவடிக்கை இது. 

பாரீஸ் ஒப்பந்தத்தில் சென்ற ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டன. இது உலக அளவில் அமலுக்கு வந்தது. ஆனாலும், இது சர்வதேச சட்டம் என்பதால், ஒவ்வொரு நாடும் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இது பயன் தரும். இந்தச் சூழலில் தான் பாரீஸ் ஒப்பந்தம் தங்களுக்கு வேண்டாம் என ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். அது அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளை, பொருளாதாரத்தை பாதிக்கும் ஓர் ஒப்பந்தம் என்பது அவரது வாதம்.

அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சவாலாக இருக்கும் சீனாவின் குறுக்கு வழிதான் இந்த ஒப்பந்தம் என்கிறார் ட்ரம்ப். தேர்தலுக்கு முன்பே தனது வாக்குறுதிகளில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். 

ட்ரம்ப் விலகினாலும் இந்தியாவும், சீனாவும் இதில் தொடரப்போகின்றன. இதுபோலவே, ஐரோப்பிய நாடுகள் பலவும் ஒப்பந்தத்தில் தொடரப்போவதாக அறிவித்திருக்கின்றன. அவ்வளவு ஏன், அமெரிக்காவின் சில மாகாணங்களும் டிரம்ப்பின் முடிவை மீறி பாரீஸ் ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இருந்தாலும், அமெரிக்காவின் இந்த முடிவை இன்னும் சில நாடுகள் பின்பற்றும் ஆபத்தும் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

டிரம்ப்பின் இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்திருக்கும் பிரான்ஸ் அதிபர் இப்படி சொல்கிறார்.

“'நாம் எங்கு வாழ்ந்தாலும், யாராக இருந்தாலும், நம் அனைவருக்கும் பொறுப்பு ஒன்றுதான். அது, இந்த பூமியைப் பாதுகாப்பது. அமெரிக்காவின் முடிவை மதிக்கிறேன். ஆனால், அமெரிக்கா மற்றும் இந்த பூமிக்கு எதிராக செய்யப்படும் மிகப்பெரிய தவறு இது'”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close