Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக மக்களுக்கு மார்க் சக்கர்பெர்க்கின் வேண்டுகோள்!

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். ’இந்த முடிவு, நம் குழந்தைகளைத்தான் பாதிக்கும்’ என்று மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

மார்க் சக்கர்பெர்க்


2015-ஆம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து, இரவு பகலாக பருவநிலை மாற்றம்குறித்து விவாதித்து, ஓர் ஒப்பந்தத்தை வடிவமைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை (Carbon Emmission) இயன்றளவு குறைப்பது. உலகத்திலேயே அதிகளவு கரியமில வாயுவை உமிழும் அமெரிக்கா நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டது. ஆனால், தற்போது ’அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழித்துவிடும்’ என ட்ரம்ப் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், ‘பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான முடிவு, நம் சுற்றுச்சூழலையும் பொருளாதாரத்தையும் வருங்காலத்தில் நம் குழந்தைகளையுமே பாதிக்கும்’ எனத் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும், ‘எங்கள் நிறுவனம் சார்பாக இனி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முடிவெடுத்துள்ளோம். உலகின் ஒட்டுமொத்த சமுதாயமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து, பருவநிலை மாற்றத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவோம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் மார்க் சக்கர்பெர்க்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close