Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய-வம்சாவளியைச் சேர்ந்த லியோ வராத்கர், அயர்லாந்தின் பிரதமர் ஆவாரா?

அயர்லாந்தின் பிரதமராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட லியோ வராத்கர் தேர்வு செய்யப்படுவார் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ வராத்கர்


அயர்லாந்தின் தற்போதைய பிரதமர் என்டா கென்னி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். இதனால், இன்று அயர்லாந்தின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் அயர்லாந்து நலத்துறை அமைச்சர் லியோ வராத்கர் மற்றும் அயர்லாந்தின் வீட்டு வசத்துறை அமைச்சர் சைமன் கவேன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில் லியோ வராத்கர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை மும்பையைச் சேர்ந்தவர். தாயார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இன்றைய தேர்தலில் அதிக ஆதரவு லியோ வராத்கருக்கே உள்ளது. இந்தப் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றால், அயர்லாந்தின் முதல் இளம் பிரதமர், முதல் ஓரினச்சேர்க்கையாளர் பிரதமர், முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் எனப் பல பெருமைகள் லியோ வராத்கருக்கு வரும்.

அயர்லாந்து பிரதமர் தேர்தலுக்கான முடிவுகள் இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணியளவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close