Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் லண்டனை உலுக்கிய தீவிரவாத தாக்குதல்! 

லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இதுவரை ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Londom terror attack
 

லண்டன் நகரின் மையப்பகுதியில் உள்ள லண்டன் பாலத்தில் நேற்றிரவு வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த மர்ம நபர்கள், சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி உள்ளனர். அந்த மர்ம நபர்கள் இதே போன்று மூன்று முறை பாதசாரிகள் மீது வேன் மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளனர். அதுமட்டுமன்றி கத்தியால் பலரை தாக்கி உள்ளனர்.  அவர்கள் ஏற்படுத்திய இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த லண்டன் போலீஸ் தாக்குதல் நடத்திய மூன்று நபர்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக கூறப்படுகிறது. 

கடந்த மார்ச் மாதம் லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர் பாலம் மற்றும் பாராளுமன்ற வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close