Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தடை எதிரொலி! சவுதிக்குக் கத்தார் பதிலடி

கத்தார் நாட்டுடனான தூதரக தொடர்புகளைத் துண்டிப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளதையடுத்து, சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டதாகக் கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

qatar
 

கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் எமிரேட்ஸ், எத்திஹாட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நாளை முதல் கத்தாருக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தவுள்ளதாக அறிவித்துவிட்டன.

இந்நிலையில் சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்திவிட்டதாகக் கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இத்தகவல் கத்தார் ஏர்வேஸின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close