Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லண்டன் தாக்குதல் : தீவிரவாதிகள்குறித்து திடுக் தகவல்!

லண்டன் நகரின் மையப் பகுதியில் உள்ள லண்டன் பாலத்தில், வாகனத்தை வேகமாக ஓட்டிவந்த நபர்கள், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதினர். அந்த மர்ம நபர்கள், இதே போன்று மூன்று முறை பாதசாரிகள் மீது வேனை மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி, கத்தியால் பலரைத் தாக்கியுள்ளனர்.

London Attack


அவர்கள் ஏற்படுத்திய இந்த விபத்தில், சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த லண்டன் போலீஸ், தாக்குதல் நடத்திய மூன்று நபர்களைச் சுட்டு வீழ்த்தினர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இதையடுத்து, சுட்டு வீழ்த்தப்பட்டவர்களில் இருவரின் பெயர் மற்றும் விவரங்களை இங்கிலாந்து போலீஸார் வெளியிட்டுள்ளனர். குராம் ஷாசத் பட் மற்றும் ரவிட் ரெட்டானே என்பது இவர்களின் பெயர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில், குராம் ஷாசத் என்பவர் பாகிஸ்தானில் பிறந்து, பிறகு இங்கிலாந்தில் குடியுரிமை பெற்றவர். இவர், இதற்கு முன் சேனல் 4 ஆவணப்படத்தில் தோன்றியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு நபர் குறித்த தகவலை போலீஸார் வெளியிடவில்லை.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close