Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மொசூல் நகரில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு ஆபத்து : எச்சரிக்கும் யுனிசெஃப்

2014 ஜூன் மாதத்தில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஈராக்கின் மொசூல் நகரத்தைக் கைப்பற்றியது. அது முதல், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு மொசூல் முக்கியத் தளமாக இருந்துவந்தது. 


இதையடுத்து, கடந்த சில மாதங்களாகவே மொசூல் நகரை மீட்கும் நோக்கில், ஈராக் அரசு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவருகிறது. ஈராக் அரசுக்கு, அமெரிக்காவும் உதவவே ஐஎஸ் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகள் மீட்கப்பட்டன. ஆனால், இந்தச் சண்டையில் பொது மக்களும் அதிக அளவு உயிரிழந்துவருகின்றனர்.


குறிப்பாக, 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  தற்போது, ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் சிறிய அளவிலான பகுதியே உள்ளது. இந்நிலையில், தீவிரவாதிகளிடம் உள்ள எஞ்சிய பகுதியை மீட்டு மொசூலைக் கைப்பற்ற, கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் ஈராக் அரசுப்படைகள் மீண்டும் தாக்குதல் நடத்திவருகின்றன. இதில், அரசுப்படை தொடர்ந்து முன்னேறி வருகின்றது.


இந்நிலையில், ஐஎஸ் வசம் உள்ள பகுதியில் சுமார் 1 லட்சம் குழந்தைகள் சிக்கியிருப்பதாகவும், அவர்கள் தீவிர ஆபத்தில் உள்ளதாகவும் ஐ.நா-வின் யுனிசெஃப் தெரிவித்துள்ளது. அவர்களை, மனிதக் கேடயமாகப் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக, தற்போது நிலவிவரும் சண்டையில், தப்பியோட முயன்ற பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close