Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வடகொரியா போர் விமானங்கள் சாகச நிகழ்வு: தாக்குதலுக்கு முன்னோட்டமா..?

வடகொரியாவில் சக்திவாய்ந்த, அதிநவீன போர் விமானங்களின் சாகச நிகழ்வு அதிபர் 'கிம் ஜாங் உன்' தலைமையில் நடைபெற்றது. இந்த சாகச நிகழ்வுகளால் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பதற்றத்தில் உள்ளன.

வடகொரியா

தொடர் ஏவுகணைச் சோதனை, அணு ஆயுதச் சோதனை என உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலேயே வடகொரியாவின் செயல்கள் உள்ளன. சர்வதேச அளவிலும், ஐநா-வின் மூலமாகவும் பல எச்சரிக்கைகள் கொடுத்த பின்னரும் தன் நிலைப்பாட்டை  இதுவரையிலும் வடகொரியா மாற்றிக்கொள்ளவே இல்லை. இதற்கான சமீபத்திய சாட்சி, வடகொரியா தன்னுடைய ராணுவத்தின் அதிநவீன போர் விமானங்களையும், ஜெட் ரக விமானங்களையும் சாகச நிகழ்வில் பங்குபெறச் செய்துள்ளது. இந்த சாகச நிகழ்வுகளை வடகொரியா அதிபர் 'கிம் ஜாங் உன்' கண்டு ரசிப்பது போன்ற புகைப்படங்கள் வடகொரிய ஊடகங்கள் மூலம் தற்போது வெளியாகியுள்ளன.

போர் விமானங்களைத் தாக்கி அழிப்பது, குண்டு வெடிப்பு நிகழ்த்துவது, ஏவுகணைத் தாக்குதல்கள் எனப் பல சாகசங்களை வடகொரிய போர் விமானங்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளன. ஏற்கெனவே கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துக் காணப்படும் இச்சூழலில் வடகொரியாவின் இம்மாதிரியான செயல்கள் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளின் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close