Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’இந்த’ ஐ.டி கம்பெனிகளுக்கு மட்டும் ஹெச்1பி விசா: அமெரிக்கா சிறப்பு ஒப்புதல்!

ஒரு சில குறிப்பிட்ட ஐ.டி நிறுவனங்களுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவிலான ஹெச்1 பி விசாக்கள் வழங்க அமெரிக்கா சிறப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஹெச் 1 பி விசா

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவி ஏற்றதிலிருந்தே இந்தியர்களைக் கலங்கடிக்கும் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். முதலாவதாக அமெரிக்காவிலுள்ள ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிய வழங்கப்படும் ஹெச்1 பி விசாவுக்கு அந்நாட்டு அரசு, கடும் கட்டுப்பாடுகள் விதித்தது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. 

அமெரிக்கர்களின் நல்லாதரவைப் பெற ட்ரம்ப் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். இதனால் இந்திய ஐடி பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ஐ.டி தொடர்பான படிப்புகள் பயின்று வந்தவர்களும், வேலை செய்து வந்தவர்களும் கடும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவானது.

தற்போது, அமெரிக்கா தனது புதிய உத்தரவாக ஐடி பணியாளர்களுக்கு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. இதன்படி டி.சி.எஸ்., விப்ரோ, இன்போசிஸ் உள்ளிட்ட 7 இந்திய நிறுவனங்களுக்குக் குறைந்த அளவிலான ஹெச்1 பி விசாக்கள் வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக டிசிஎஸ் நிறுவனத்துக்கு 2,040 விசாக்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close