Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகை உலுக்கிய அலெப்போ சிறுவனின் மற்றொரு புகைப்படம்: தற்போது இணையத்தில் வைரல்!

சிரியாவில், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த சிறுவன் ஓம்ரானின் புகைப்படம் உலகை அதிரச்செய்தது. தற்போது அந்தச் சிறுவன், தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.


சிரியாவில், கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்துவருகிறது. சிரியா அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களும் ஐஎஸ் தீவிரவாதிகளும் சண்டையிட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஆசாத் அரசுக்கு எதிராக அமெரிக்காவும் ஆயுதங்களை வழங்கிவருகின்றன. உள்நாட்டுப் போர் முடிவுபெறாமல் தொடர்ந்து நீடித்துவருகிறது. கடந்த ஆண்டு, கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்யப் படை நடத்திய தாக்குதலில், அலெப்போ நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

ஏராளமானோரின் வீடுகள் இடிந்து நொறுங்கின. அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஓம்ரான் என்ற சிறுவன், தூசு படர்ந்த உடலில் ரத்தம் வழிந்தவாறு ஆம்புலன்ஸில் அமர்ந்திருக்கும் புகைப்படம், உலகை அதிரச்செய்தது. அந்தச் சிறுவனின் புகைப்படம், அலெப்போ நகரின் நிலையை உலகுக்கு உரக்க எடுத்துரைத்தது. தற்போது அந்தச் சிறுவன், அரசுக்கு ஆதரவான தொலைக்காட்சியில் தனது தந்தையுடன் தோன்றினான். அதில் பேசிய ஓம்ரானின் தந்தை, ''நாங்கள் இப்போது அதிபர் ஆசாத்தின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளோம். இது, எங்களுடைய ஊர். இதை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம்'' என்றார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close