Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈரான் நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு: தீவிரவாதிகளிடம் பணயக் கைதிகள்!

ஈரான் நாடாளுமன்றத்தில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்தார். இந்தத் தாக்குதலில், தீவிரவாதியிடம் சிலர் பணயக் கைதிகளாகச் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஈரான் நாடாளுமன்றம்

ஈரான் நாடாளுமன்றத்தில், இன்று காலை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். உள்நாட்டு ஊடகங்களின் சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், தீவிரவாதியிடம் சிலர் பணயக் கைதிகளாகச் சிக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

பாதுகாப்பு அதிகாரியுடன், மேலும் இரு நாடாளுமன்றப் பார்வையாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களின்  விவரமோ, பணயக் கைதிகளின் நிலைகுறித்தோ இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

தற்போது, ஈரான் மெட்ரோ ரயில் நிலையம் அருகிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்த முழு தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close