Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரவாத ஒழிப்புப் படை... ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பிரான்ஸ் நெருக்கடி!

பிரான்ஸில் தொடர்ந்து அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்க, புதிதாக தீவிரவாத ஒழிப்புப் படை ஒன்றை உருவாக்கியுள்ளார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான்.

மெக்ரான்

பிரான்ஸில் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து பிரான்ஸில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டது. இருப்பினும் ஐ.எஸ் தீவிரவாதிகளால் பிரான்ஸில் அவ்வப்போது தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.  மேலும் நேற்று, பிரான்ஸில் உள்ள தேவாலயத்தின் எதிரில் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவரால், போலீஸ் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

இதனிடையே பிரான்ஸில் புதிதாக தீவிரவாத ஒழிப்புப் படையை உருவாக்கியுள்ளார் அதிபர் மெக்ரான். மேலும், இந்தத் துறை அதிபரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரான்ஸில் தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அதிபர் மெக்ரான். கடந்த 2 வருடங்களில் தீவிரவாதிகளால், பிரான்ஸில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close